அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிண்ணியா நகர சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
கிண்ணியா நகர சபையின் அமர்வானது இன்று (11 )சபை மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சபை உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை மற்றும் கறுப்பு பட்டி அணிந்து கைதுக்கு எதிராக சுலோகங்களை ஏந்தியவாறும் கண்டனப் பிரேரணையை நிறைவேற்றினார்கள்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எவ்வித குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளமையானது சிறுபான்மை சமூகத்தை அரசு வஞ்சிக்கும் செயலா ? போன்ற வாசகங்களையும் ஏந்தியவாறு எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சக கட்சி உறுப்பினர்களும் கண்டணத்தின் போது தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.