றொரன்டோவில் தீயனைப்புப் படைவீரரை தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளன.
கடந்த வார இறுதியில் குறித்த நபர் தனது வாகனத்தை தீயனைப்பு படையின் ட்ரக் வண்டி மீது மோதியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு;ள்ளது.
தீயனைப்புப் படைவீரர், பொதுமக்கள் மற்றும் நாய் ஒன்றைறும் இந்த நபர் தாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எக்லின்டன் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திலிருந்து குறித்த நபர் தப்பிச் சென்ற போதிலும், நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
வாகனத்தில் மோதி ட்ரக்கையும் மக்களையும் அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாகவும் குறித்த நபர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.