அல்பர்ட்டா மாகாணத்தில் அஸ்ட்ராசென்கா தடுப்பூசி விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது..
போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கப் பெறாமையினால் இவ்வாறு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தில் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியின் மருந்தளவு சுமார் 255000 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளின் அளவின் அடிப்படையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.