Home இலங்கை “ ஐ ரோட் ” திட்டம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

“ ஐ ரோட் ” திட்டம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

by admin

வடமாகாணத்தில் இடம்பெறும் 17 ஒப்பந்த திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய ஆளுநர் ,வீதி அமைப்பதற்கான திட்டங்களினை வகுக்கும் போது கழிவுநிர் வடி காலமைப்பு, மின்சாரம் , நீர் வடிகாலமைப்பு என்பவற்றினை கவனத்தில் கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் மேற்கொள்ளப்படும் iRoad திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (11.5.2021) காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம செயலாளர் , ஆளுநரின் செயலாளர் , உதவிச்செயலாளர் , இணைப்புசெயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர் , மாநகரசபை ஆணையாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் இடம்பெறும் 17 ஒப்பந்த திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய ஆளுநர் ,வீதி அமைப்பதற்கான திட்டங்களினை வகுக்கும் போது கழிவுநிர் வடி காலமைப்பு, மின்சாரம் , நீர் வடிகாலமைப்பு என்பவற்றினை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளினை தவிர்க்கும் முக மாகநகரசபை, மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஆகியன வீதி நிர்மாண பணிகளை தொடங்குவதற்கு முன்னர் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடிதேவையான இட வசதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்ததோடு மாநகர சபைகள் கட்டடங்களுக்கான அனுமதியினை வழங்கும் போது எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அதனைதயடுத்து, யாழ் மாவட்டத்தின் iRoad திட்டத்தின் நிலைப்பாடுதொடர்பில் கேட்டறிந்த ஆளுநர் கிரவல் மற்றும் மணலினை சட்டபூர்வமான முறையில் பெற்றுக்கொள்வதற்கு, மணலின் அளவு தொடர்பான தகவலினையும் அதற்குரிய அனுமதியினையும் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாகபெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் iRoad திட்டம் தொடர்பில் கலந்துரையாடுகையில், கிராமப்புற வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதினை தவிர்க்கும் முகமாக வர்த்தமானியில் பிரசுரம் செய்வதுடன் குறித்த வீதிகளில் பதாதைகளினை காட்சிப்படுத்துவதுடன் பொலிசாருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர் வடமாகாணத்தின் சனத்தொகையினை கருத்தில் கொண்டே அனைத்து அபிவிருத்திதிட்டங்களினையும் தயார் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், முல்லைத்தீவு, மன்னார் , வவனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் iRoad திட்டசெயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

related posts