கரோனா 2ம் அலையால் நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாட்டில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோரும், 6 மாநிலங்களில் 50,000லிருந்து ஒரு லட்சம் பேரும் மற்றும் 17 மாநிலங்கள்ல் 50,000க்கு குறைவாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், புதுவை, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நகலாந்து, அருணாச்சல பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் மற்றும் கோவா மாநிலங்களில் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஆந்திரம், தில்லி, ஹரியாணா, சட்டீஸ்கர், பிகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது.
மேலும், தற்போது கரோனா பரவலில் கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.
தேசிய அளவிலான பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 21 சதவீதமாக உள்ளது. ஆனால் மொத்தமுள்ள 734-ல் 310 மாவட்டங்களில் தேசிய விகிதத்தைவிட அதிகமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி 19,45,299 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள எந்த நாடும் ஒரே நாளில் இவ்வளவு பரிசோதனை செய்ததில்லை.