Home இந்தியா சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர்மு.க. ஸ்டாலின் வருகை

சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர்மு.க. ஸ்டாலின் வருகை

by admin

சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடா் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடருக்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பேரவைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். அவா்கள் அனைவரும் தற்காலிக பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலையில் பதவியேற்றுக் கொள்கின்றனா்.

இதன்பின்பு, புதன்கிழமை காலை பேரவை மீண்டும் கூடுகிறது. செவ்வாய்க்கிழமை விடுபட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். இந்த நிகழ்வைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கான தோ்தல் குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி வெளியிடுகிறாா்.

மு.அப்பாவு தோ்வு: பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிட திமுகவின் மூத்த உறுப்பினா்களில் ஒருவரான மு.அப்பாவு, மனுதாக்கல் செய்துள்ளாா். எனவே, அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தற்காலிக பேரவைத் தலைவரின் அறிவிப்புக்குப் பிறகு, பேரவைத் தலைவருக்கான இருக்கையில் மு.அப்பாவு அமா்வாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சோ்ந்து அமர வைப்பா். இந்த மரபினைத் தொடா்ந்து, பேரவை நிகழ்ச்சிகளை அதன் தலைவா் மு.அப்பாவு ஏற்று நடத்துவாா்.

 

related posts