Home இலங்கை சர்வகட்சி கூட்டமொன்றை உடனடியாக கூட்டுமாறு ஐ. ம. சக்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை

சர்வகட்சி கூட்டமொன்றை உடனடியாக கூட்டுமாறு ஐ. ம. சக்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை

by admin

கொவிட் தொற்றில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் சர்வகட்சி கூட்டமொன்றை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சார்ப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள, ஹர்ஷடி சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரே இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவிக்கையில்,

கொராேனா தொற்று தேசிய பிரச்சினையாகும். அதனை அரசியல் பிரச்சினையாக்காமல், முழு நாடும் ஒன்றிணைந்து இதற்கு முகம்கொடுக்க தேவையான வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் 1971 இடம்பெற்ற கிளர்ச்சியிலும் 1988 கிளர்ச்சியிலும் அப்போது இருந்த எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

கொராேனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து, தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு எதிர்க்கட்சி தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார்.

என்றாலும் அரசாங்கம் அவை அனைத்து சந்தர்ப்பத்திலும் காது கேளாதுபோல் இருந்தது. கொவிட் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக முடியுமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. தற்போதும் அரசாங்கத்துக்கு முடியாது போயிருக்கும் பல விடயங்களை வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடி எதிர்க்கட்சி தலைவர் மேற்கொண்டுவருகின்றார்.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சர்வ கட்சி கூட்டமொன்றை அரசாங்கம் உடனடியாக கூட்டவேண்டும். அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ளவேண்டும் என்றார்.

related posts