கரோனா பரவலுக்கு 5 ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘கரோனா பரவலுக்கும் 5 ஜி தொழில்நுட்பத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை’ என்று மத்திய அரசின் தொலைத் தொடா்புத் துறை விளக்களித்துள்ளது.
தொலைத் தொடா்பு இணைப்புகளால் இந்தியாவில் கரோனா பரவுகிறது என்பது பொய்யான தகவல் என்றும் இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்ப சோதனையே இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தொலைத் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.