Home இந்தியா கோவிட் 2வது எப்போது குறையும்? – ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

கோவிட் 2வது எப்போது குறையும்? – ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

by admin

கரோனா 2ம் அலை பரவுவதற்கு உருமாறிய கரோனா வைரஸும் காரணம். உருமாறிய கரோனா வைரஸால்தான் இன்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், உருமாறிய கரோனா வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூற முடியாது.

கரோனா 2ம் அலை வேகமாக உச்சத்தை அடைந்துவிட்டது. கரோனா பாதிப்பு குறைவதாக தற்போதைய வரைபடம் காட்டுகிறது. ஆனால், முழுவதுமாகக் குறைவது அவ்வளவு எளிதல்ல. இரண்டாம் அலை முழுவதுமாக குறைவதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம். கரோனா பாதிப்பு குறைவதாக வரைபடம் காட்டினாலும் ஒருநாள் பாதிப்பு என்பது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாகத்தான் இருக்கும்.

கரோனா முதல் அலை பாதிப்பில் நிலையான சரிவு இருந்தது. அதாவது படிப்படியாக குறைந்தது. மேலும் அது 90,000-95,000 என்ற குறைவான பாதிப்பில் தொடங்கியது. ஆனால், இரண்டாம் அலையின் உச்சம் 4 லட்சம் எனத் தொடங்கியுள்ளது. எனவே, இரண்டாம் அலை பாதிப்பு எதிர்பார்ப்பதைவிட மெதுவாகவேக் குறையும்.

இந்தியாவில் உயிரிழப்பு தொடர்பான தரவுகள் தவறானது. இதற்கு ஒரு மாநிலம் அல்லது குழுவின் மீது தவறு சொல்ல முடியாது. ஆனால் இப்போது நாம் பதிவு செய்யும் உயிரிழப்புகள் தவறானது என்றே கருதுகிறேன்.

கரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டதால் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முடியும் என்ற மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு.

அதேபோல மக்கள் யாரும் கரோனாவை பரப்ப விரும்புவதில்லை. மாறாக அவர்கள் கரோனாவை பரப்ப வாய்ப்பளிக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டது, நமக்கு எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என்று நினைத்து திருமணங்கள், விழாக்கள் நடத்தினோம். அதன் காரணமாகவே தற்போது கரோனா மிகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களும், மத விழாக்களும் காரணம்.

அதேபோன்று கரோனா தடுப்பூசி பெற வாய்ப்பிருந்தும் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பலரும் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளனர். இந்த இரு காரணங்களினாலே கடந்த பிப்ரவரி முதல் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. அதனால் வரும் விளைவுகள் மிகவும் அரிதானது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு.

கரோனா தடுப்பூசிகளை நிறுவனங்கள் திட்டமிட்டபடி முறையாக வழங்குவதற்கும் வருகிற ஜூலை மாதம் ஆகலாம். எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று கூறியவர்களில் 75% பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை கண்டிப்பாக குறையும். ஆனால், அது குறைவதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம். அதேநேரத்தில் சூழ்நிலைகள், தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறியுள்ளார்.

related posts