கனடாவில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்;ச்சி பதிவாகியுள்ளது.
நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகளவில் உயர்வடைந்து சென்ற நிலையில் தற்பொழுது வீழ்ச்சியடைந்து செல்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 30ம் திகதியின் பின்னர் கனடாவில் நாள் ஒன்றில் பதிவான குறைந்த நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை 4880 ஆக காணப்பட்டுள்ளது.
மாகாணங்கள் தழுவிய அடிப்படையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.