Home இந்தியா புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் கடிதம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் கடிதம்

by admin

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளன.

நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்தி, எச்.டி.தேவெ கௌடா, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளைக் கைவிட்டு நாடு முழுவதும் இலவச கரோனா தடுப்பூசிக்கு முகாம்களை தொடங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆக்ஸிஜன், கரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு பி.எம்.கேர்ஸ் போன்றவற்றிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

கரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

related posts