பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை திட்டமிடப்பட்டிருந்தும் அப்போதைய அசாதாரண சூழ்நிலையால் செல்ல முடியாமல் போனது.
ஒரு மாத கால மருத்துவ சிகிச்சையினை நிறைவு செய்த பின்னர் அவர் நாடு திரும்புவார் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.