அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னியின் கட்சியான ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் கடுமையான உட்கட்சி முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கென்னியின் தலைமைத்துவம் தொடர்பில் பகிரங்கமான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் சிரேஸ்ட பின்வரிசை உறுப்பினர் டொட் லோவென் தனது முகநூல் பக்கத்தில் கென்னியை பதவி விலகுமாறு கோரி கடிதமொன்றை பிரசூரித்துள்ளார்.
கென்னியின் தலைமைத்துவம் தொடர்பில் நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் போலவே பெரும்பான்மையான அல்பர்ட்டா பிரஜைகள் கென்னியின் தலைமைத்துவம் மீது நம்பிக்கையற்றிருப்பதாகவும் அவர் இதுவரை காலம் வழங்கிய சேவைக்கு நன்றி பாராட்டுவதாகவும் டொட் லோவென் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.