ஒன்றாரியோ மாகாணத்தில் வீட்டிலேயே இருங்கள் உத்தரவு மேலும் நீடிக்கப்படுவதாக முதல்வர் டக் போர்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி வரையில் இந்த உத்தரவு நீடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வீட்டிலேயே இருங்கள் உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடிய சாத்தியமில்லை என முதல்வர் போர்ட் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு புறம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதுடன் மறுபுறத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளின் ஊடாக கொவிட்டை கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.