இஸ்ரேலிய படையினர் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான தரைமார்க்க மோதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கு மற்றும் இஸ்ரேலிய படையினர் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி காசாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இஸ்ரேலில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஆயிரத்து 600 ஏவுகணை தாக்குதல்களை இலக்காக கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் லோட் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.