ஒன்றாரியோ மாகாணத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்திற்கு பாரியளவில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்று வருவதன் காரணமாக இவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பைசர் மற்றும மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் கிடைக்கப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று காவுகை அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு தடுப்பூசி ஏற்றலின் போது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது.