ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
ஒன்றாரியோவின் இரண்டு ஆசிரிய தொழிற்சங்கங்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மாகாணத்தில் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதற்கு ஆசிரிய தொழிற்சங்கங்களே காரணமாகும் என முதல்வர் போர்ட் கருத்து வெளியிட்டிருந்தார்.
மாகாணம் தழுவிய வீட்டிலேயே இருங்கள் உத்தரவு குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
முதல்வர் போர்ட்டின் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தங்களது கடுயைமான அதிருப்தியை வெளியிட்டுள்ளன.