லிபரல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒலிபரப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகப் பயனர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான எந்தவொரு சரத்தும் இந்த புதிய உத்தேச சட்டத்தில் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
கனேடிய நீதி திணைக்களத்தினால் இந்த உத்தேச சட்டம் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நீதி திணைக்களம் சட்டத்தினால் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளது.
பில் சீ-10 என்ற ஒலிபரப்புச் சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.