Home இந்தியா அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் டவ்-தே

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் டவ்-தே

by admin

அரபிக்கடலில் நாளை சனிக்கிழமை டவ்-தே புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வருகிற மே 14 -ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 -ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கரையைக் கடக்கலாம்.

புயலால் லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்ரம், தென் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கும்.

இந்நிலையில், நாளை புதிய புயல் டவ்-தே உருவாவதால் தமிழகம், கேரளத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மேற்கு கடற்பகுதியிலுள்ள லட்சத்தீவுகள் அருகே வரும் 14 ஆம் தேதியிலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தெரிய வருகிறது. எனவே, அந்த நாள்களில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படும். பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே, இம்மாவட்டத்தின் அனைத்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தென் அரபிகடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

related posts