Home கனடா ஒரு நூற்றாண்டு காலம் சேவையில் ஈடுபட்டிருந்த Greyhound பஸ் சேவை முடிவுக்கு…

ஒரு நூற்றாண்டு காலம் சேவையில் ஈடுபட்டிருந்த Greyhound பஸ் சேவை முடிவுக்கு…

by Jey

சுமார் ஒரு நூற்றாண்டு காலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த க்ரெய்ஹொன்ட் பஸ் சேவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து பஸ் போக்குவரத்து சேவைகளும் முடிவுறுத்தப்படுவதாக நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய நகரங்களுக்கான பஸ் சேவையும் எதிர்வரும் வியாழக்கிழமை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் றொரன்டோ, மொன்றியல் மற்றும் வான்கூவார் ஆகிய நகரங்களிலிருந்து எல்லை தாண்டிய பஸ் போக்குவரத்து சேவைகள் மட்டும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைகள் திறக்கப்பட்டதன் பின்னர் இந்த பயணிகள் போக்குவரத்து சேவையை மட்டும் பஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts