ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் வானிலை மையம், ‘ஹோன்சு கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை 5:28 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சில பகுதிகளில் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.