Home இலங்கை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 கைது

by Jey

இலங்கையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பின்பற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 9,029 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

related posts