Home இலங்கை நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை அநாகரிகத்தின் உச்சகட்டம் – எம்.ஏ.சுமந்திரன்

நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை அநாகரிகத்தின் உச்சகட்டம் – எம்.ஏ.சுமந்திரன்

by admin
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திட்டமிட்டு உடைக்கப்பட்டமை அநாகரிகத்தின் உச்சகட்டமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மிலேச்சத்தனமான சம்பவத்தினைக் கண்டித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது.
மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும் பொலிஸும் அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர் தான் இதுசெய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம் என்றார்.

related posts