இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்துள்ளது.
91.6 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்புட்னிக் வி இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் சோதனைக்காக இன்று போடப்பட்டது. இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனமே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.