கனடாவில் கொவிட் தடுப்பூசி விநியோகத்திற்கு பொறுப்பான பிரதானி மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கனேடிய பொதுச் சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின் பொறுப்பதிகாரியாக ஃபோர்ட்டின் கடமையாற்றி வந்தார்.
ஃபோர்டின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பு திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இராணுவ விசாரணை ஒன்று தொடர்பில் இவ்வாறு அவர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் என்ன விசாரணைகள் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
மேஜர் ஜெனரல் ஃபோர்டினின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சர் ஹார்ஜிட் சாஜான் தெரிவித்துள்ளார்.