Home இந்தியா தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு: மத்திய அரசு

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு: மத்திய அரசு

by admin
கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கின்றது.
தற்போது 11 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கர்நாடகத்தில் 5,98,625 பேர், மகாராஷ்டிரத்தில் 5,21,683 பேர், கேரளத்தில் 4,42,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
8 மாநிலங்களில் 50,000க்கும் அதிகமானோரும், 17 மாநிலங்களில் 50,000க்கு குறைவாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரம், குஜராத், உ.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நாட்டில் கடந்த வாரம் 21.9% ஆக இருந்த நேர்மறை விகிதம் இப்போது 19.8% ஆக குறைந்துள்ளது. தில்லி, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நேர்மறை விகிதம் குறைந்துள்ளது.

related posts