Home இந்தியா மே 28-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மே 28-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

by admin
ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக மே 28-ம் தேதி நடைபெறுகிறது.
இதுபற்றி நிதியமைச்சரின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:
“நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் மே 28 காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக தில்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.”
ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. 2021-இல் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பதால் நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசி உள்பட நோய்த் தொற்று தொடர்பான சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மாநிலங்கள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related posts