கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பது தொடா்பாக, சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசித்தாா். இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
புதிய கட்டுப்பாடுகள்: இதற்கு முன்பு தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. இப்போது இக்கடைகள் அனைத்தும் காலை 6 முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
அவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இந்த கடைகளைத் தவிா்த்து இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
எவையெல்லாம் இனி இயங்காது?: காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்தக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. தேநீா் கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது தேநீா் கடைகள் இயங்க அனுமதியில்லை.
ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு பொது முடக்கம் எதிா்வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (மே 16, 23) தொடரும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கும்.
எவையெல்லாம் இயங்கும்?: ஏ.டி.எம்., பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள் ஆகியன எப்போதும் போல செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
மாவட்டத்துக்குள் செல்ல இ-பதிவு முறை கட்டாயம்
மாவட்டத்துக்குள் செல்லவும் இணைய பதிவு கட்டாயம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இணைய பதிவு முறை கட்டாயமாக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோா்களுக்கான தேவை போன்றவற்றுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இணைய பதிவு முறை (ஜ்ஜ்ஜ்.ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்) கட்டாயமாக்கப்படும்.
இந்த இணைய பதிவு முறையானது வரும் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
புதிய கட்டுப்பாடுகள்
நாளை முதல் தேநீா் கடைகள் இயங்கத் தடை
காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி
மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு கட்டாயம்
ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி
ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் இயங்க அனுமதி
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி மறுப்பு