பலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு றொரன்டோ நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுது.
றொரன்டோவின் Nathan Phillips சதுக்கத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த்து.
பலஸ்தீன கொடிகள் எந்தியவாறு இந்தப் போராட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பலஸ்தீன இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அடக்குமுறைகள் என்பன வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்திற்கும் பலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அண்மைய நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.