தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தில் வசித்து வருபவர் சிவா(வயது 25). சிறிய வீட்டில் வசித்து வரும் இவருக்கு
அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிவாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் சிவா, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். ஒரே ஒரு அறை மட்டும் இருக்கும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டால் வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவிவிடும் எனவும் அவர் அஞ்சினார்.
உடனே சிவா இதற்காக தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார். அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டிய சிவா அதில் தன்னை
தனிமைப்படுத்திகொண்டிருக்கிறார். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.