ஒன்றாரியோ மாகாணத்தில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதிலும் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாகாணங்களில் தடுப்பூசி விநியோகத்தை மேலும் கிரமப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மாகாணத்தில் அதிக நோய்த் தொற்று அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் ஏழு மில்லியன் தடுப்பூசிகள் இதுவரையில் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக முதல்வர் டக் போர்ட் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணத்தின் அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.