தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்தவாரம் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று(மே 17) வந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு நிதியாக தன் சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏற்கனவே டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரஜினி. இப்போது நேரிலும் வாழ்த்திவிட்டு, கொரோனா தடுப்பு நிதியையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‛‛தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.