Home இலங்கை கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

by Jey

கொவிட் தொற்று உறுதியாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கொவிட் சிகிச்சை மையங்களில், கொவிட் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இன்று(17) முதல் அனுமதி வழங்கப்படும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

related posts