கனடாவில் 25000 கொவிட் பெருந்தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் பதிவான மரணங்களுடன் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
அண்மைய மாதங்களில் அதிகளவான இளையோர் கொவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறெனினும், கனடாவில் நீண்ட கால பராமரிப்பு நிலையங்களிலேயே கூடுதலான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கனடாவில் 25008 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனேடிய சுகாதார தகவல் நிறுவகம் தகவல் வெளியிட்டுள்ளது.