இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் காரணமாக காசாவில் இதுவரை 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, அவர்களில் 61 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இஸ்ரேலில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahuவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் – பலஸ்தீன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குரல் எழுப்பியுள்ளார்.
இதன்படி, தாம் எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, விரோதப் போக்கை நிறுத்துவதில் செயற்பட்டு வருவதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமரிடம் அறிவித்துள்ளார்.