Home கனடா கனடாவின் கொவிட் தடுப்பூசி ஆய்வு சாதக நிலை

கனடாவின் கொவிட் தடுப்பூசி ஆய்வு சாதக நிலை

by Jey

கனடாவின் கொவிட் தடுப்பூசி ஆய்வு மிகவும் சாதகமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்காக கனடாவினால் தயாரிக்கப்பட்டு வரும் உள்நாட்டு தடுப்பூசி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட ஆய்வுகளும் மிகுந்த வெற்றியளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 நோய்த் தொற்றாளிகளின் உடலில் இந்த தடுப்பூசி சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருவதகாக் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி குறித்த ஆய்வு வெற்றியளித்துள்ளதாக மெடிகாகோ நிறுவனத்தின் நிறைவேற்று துணைத் தலைவர் நதாலீயா லென்ட்ரீ தெரிவித்துள்ளார்.

தரமான சிறந்த தடுப்பூசி ஒன்றை அறிமுகம் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

related posts