தமிழகத்திலேயே கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மருத்துவ உயிர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கரோனா தொடர்பான மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது,
தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்காணும் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும்.
குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ வரும் 31-ம் தேதிக்குள் விருப்பக் கருத்துகளை அளிக்க வேண்டும்.
இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விருப்ப கருத்துகள் அடிப்படையில் கரோனா தடுப்பூசி உற்பத்தி, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் விரைவில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.