Home கனடா புதிய தடுப்பூசி ஒன்றுக்காக அரசாங்கம் 200 மில்லியன் டொலர் நிதி உதவி

புதிய தடுப்பூசி ஒன்றுக்காக அரசாங்கம் 200 மில்லியன் டொலர் நிதி உதவி

by Jey

புதிய தடுப்பூசி ஒன்றுக்காக கனேடிய அரசாங்கம் 200 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று போன்ற நோய்த் தொற்று நிலைமைகளின் போது பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது.

மி;ஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள பிரபல மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனமொன்றுக்கு இவ்வாறு நிதி உதவி வழப்பட உள்ளது.

mRNA என்ற தடுப்பூசியே இவ்வாறு தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையில் இந்த தடுப்பூசி உடலில் தொழிற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts