கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசியை சாதாரண குளிரூட்டியில் நீண்டகாலம் களஞ்சியப்படுத்த முடியுமென ஐரோப்பிய சங்க மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் குழு தெரிவித்துள்ளது.
பைசர் தடுப்பூசி திறக்காது ஒரு மாதம் அளவில் சாதாரண குளிரூட்டியில் களஞ்சியப்படுத்த முடியுமென குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.
5 தினங்கள் என்ற குறுகிய காலத்த9pற்கே தடுப்பூசியை களஞ்சியப்படுத்த முடியுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதனால் பைசர் தடுப்பூசியை உலகளவில் விநியோகிப்பதிலும், களஞ்சியப்படுத்துவதிலும் பிரச்சினைகள் காணப்பபட்டன.
எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்விற்கமைய பைசர் தடுப்பூசியை நீண்டகாலம் களஞ்சியப்படுத்த முடியுமென முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் மக்களுக்கு இலகுவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் காணப்படுவதாக ஐரோப்பிய சங்க மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் குழு தெரிவித்துள்ளது.