விக்டோரியா தினம் தொடர்பில் ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாணத்தில் தற்பொழுது நோய்த் தொற்றுறுதியாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாகவும் இந்த நிலைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது
அவசியமானது எனவும் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் டேவில் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா தினத்தை முன்னிட்டு இந்த வார இறுதியில் நீண்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நோய்த் தொற்று ஏற்படக் கூடிய வகையில் செயற்படக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருங்கள் என்ற உத்தரவினை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என டொக்டர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.