ஒன்றாரியோ மாகாணத்தில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகவே நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24ம் திகதியின் பின்னர் ஒன்றாரியோவில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் நோய்த் தொற்றாளர் மொத்த எண்ணிக்கை 1588 ஆக பதிவாகியுள்ளது.
மிக நீண்ட நாட்களின் பின்னரே நேற்றும் இன்றும் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விடவும் குறைவாக காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.