பீல் பிராந்தியத்தில் 12 வயது சிறார்களுக்கும் கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்டனின் மேயர் பெற்றிக் பிரவுன் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஸ்தரிப்பு குறித்து அறிவித்துள்ளார்.
குறித்த பிராந்தியத்தில் கொவிட் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து சென்ற நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.