வடக்கு மானிடோபாவின் ஷமாடாவா பழங்குடியின சமூகத்தினர் இடையே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த தற்கொலைச் சம்பவங்களினால் குறித்த பகுதியில் அவசரகாலநிலைமை பிரகடனம் செய்யப்பட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது சமூகத்தில் தற்கொலைச் சம்பவங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் இது பாரிய நெருக்கடி நிலைமை எனவும் பழங்குடியின தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உளச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பாரதூரமான சம்பவங்களினால் அவசரகால நிலைமை பிரகடனம் செய்ய நேரிட்டதாக பழங்குடியினத் தலைவர் எரிக் ரெட்ஹெட் தெரிவித்துள்ளார்.