இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொவிட் தொற்றுக்கு அமெரிக்காவின் தடுப்பூசியை பயன்படுத்த முடியுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பி.1.617 உருமாற்றமடைந்த வைரஸ் முதன்முறையாக கடந்த வருடம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் துரிதமாக வைரஸ் பரவலடைந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளும் புதிய உருமாற்றமடைந்த வைரஸிற்கு எதிராக செயற்படக்கூடியதென அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பைசர், மொடர்னா மற்றும் ஜோன்ஸன் என்ட் ஜோன்ஸன் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த முடியுமென அமெரிக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.