Home இந்தியா கருப்புப் பூஞ்சை’ நோயை தொற்றுநோயாக அறிவித்தது ராஜஸ்தான் அரசு!

கருப்புப் பூஞ்சை’ நோயை தொற்றுநோயாக அறிவித்தது ராஜஸ்தான் அரசு!

by admin
மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே இந்த கருப்புப் பூஞ்சை தாக்கி வருகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கருப்புப் பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு  அதிகரித்து வருவதால் இந்த நோயை மாநிலத்தில் ஒரு தொற்றுநோயாக மாநில அரசு அறிவித்துள்ளது. ‘ராஜஸ்தான் தொற்று நோய்கள் சட்டம், 2020’ இன் கீழ் இதனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

related posts