கனடாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாந்த பணவீக்க வீதம் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் இந்த ஏப்ரல் மாதம் உயர்வினை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது எரிவாயு விலையில் பாரியளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இது வரை காலமும் வருடாந்த பணவீக்க வீதம் 2.2 வீதமாக காணப்பட்ட போதிலும் ஏப்ரல் மாதம் இந்த தொகை 3.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று பரவுகை இந்த பணவீக்க அதிகரிப்பிற்கான பிரதான ஏதுக்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.