இலக்கை அடையும் வரை காஷா மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லையென இஸ்ரேல் சூள் உரைத்துள்ளது. 10 வது நாளாகவும் இஸ்ரேலுக்கும் பலஸ்த்தீனத்திற்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் பலஸ்த்தீனத்திற்கும் இடையிலான போர் நிறுத்தமொன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் முயற்சித்து வரும் நிலையில் தமது இலக்கான ஹமாஸ் அமைப்பு சரணடையும் வரை காஷா மீதான தாக்குதல்களை தொடரப் போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் காஷாவிலுள்ள வீடுகள் அடங்கிய பல மாடிக் கட்டிடங்கள் முற்றாக அழிந்துவிட்டன.
இத்தாக்குதலைத் தொடர்ந்து அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது. கொல்லப்பட்டவர்களுள் கூடுதலானோர் பலஸ்த்தீனர்களாவர். அவர்களுளள் 64 சிறுவர்களும் 38 பெண்களும் அடங்குகின்றனர்.