சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் சமுதாயத்தினரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதற்கும். செட்டில் ஆவதற்கும் சிறந்த நாடு என தைவானுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.
தைவான் குறித்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் பார்க்கும் வேலை மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளனர். 74 சதவீதம் பேர் வேலை – வாழ்க்கை சமநிலை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அங்குள்ள விலைவாசி குறித்து 78 சதவிதம் பேரும், மருத்துவ சிகிச்சை தரம் குறித்து 96% பேரும் மகிழ்ச்சி என கூறியிருக்கிறார்கள். 80% பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 62% பேர் அந்நாட்டில் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது எளிது என கூறியுள்ளனர்.
மேலும் இந்த டாப் 10 பட்டியலில் ஆச்சர்யமாக மெக்சிகோ இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் கோஸ்டாரிகா உள்ளது. நான்காம் இடத்தை தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியா பிடித்துள்ளது. இங்கு 69% தங்கள் வேலை மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 85% வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்வதாக தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் போர்ச்சுகல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஈக்வடார், கனடா, வியட்நாம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில் மலேசியாவுக்கு அடுத்தப்படியாக தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் 10-ம் இடத்தில் உள்ளது. அங்கு 86% பேர் தங்கள் வேலை மகிழ்வை தருவதாகவும். 85% பேர் பொதுவாகவே வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.