Home கனடா ஒன்றாரியோவில் அவசரமற்ற சிகிச்சைகளுக்கு அனுமதி

ஒன்றாரியோவில் அவசரமற்ற சிகிச்சைகளுக்கு அனுமதி

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் அவசரமற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் நோய்த் தொற்று பேராபத்து காரணமாக மாகாணத்தின் அநேக வைத்தியசாலையில் மிகவும் அத்தியாவசியமான அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே தற்பொழுது அனுமதி வழங்கப்படுகின்றது.

குறிப்பாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வது வெகுவாக வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோய் தொற்று பரவுகையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி நிலைமைகளினால் அத்தியாவசியமற்ற சத்திர சிகிச்சைகளுக்கு கிரமமான அடிப்படையில் படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

related posts