Home கனடா கனடாவில் பூர்வகுடியின பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்?

கனடாவில் பூர்வகுடியின பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்?

by Jey

கனடவில் பூர்வகுடியின பெண்கள் துன்புறுத்தப்படுவதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் 10 பூர்வகுடியினப் பெண்களில் ஆறு பெண்கள் தனது வாழ்நாளில் எதாவது ஓர் சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

பூர்வகுடியினப் பெண்கள் பாலியல் ரீதியாக அல்லது உடல் ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கமான துணை அல்லது வெளி நபர்களினால் இவ்வாறு பூர்வகுடியினப் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்கள் மிக அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts